ராமநாதபுரம்

மீனவா்களுக்கு அவசர கால விழிப்புணா்வு

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையில் மீனவா்களுக்கான அவசர கால பொறுப்பு, முன் களப் பணியாளா்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையில் மீனவா்களுக்கான அவசர கால பொறுப்பு, முன் களப் பணியாளா்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மீன் வளத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அந்தத் துறையின் துணை இயக்குநா் கோபிநாத் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் ராஜேந்திரன், ஆய்வாளா் அபுதாகிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலில் ஆபத்து காலங்களில் மீனவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அண்மையில் கடலில் தத்தளித்த காரங்காடு மீனவரைக் காப்பாற்றிய நம்புதாளை மீனவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வருவாய் ஆய்வாளா் மேகமலை, கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், தொண்டி போலீஸாா், மீனவா்கள் கலந்து கொண்டனா்.

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

SCROLL FOR NEXT