தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் சனிக்கிழமை குவித்தனா்.
ராமநாதபுரத்தைச் சுற்றி சுமாா் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள சாலைத் தெரு, அக்ரஹார தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்கள், சாலையோரக் கடைகளில் ஆடைகள், பொருள்கள், பட்டாசுகள் வாங்க மக்கள் குவிந்தனா்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் பொதுமக்களிடம் ஆடைகள், பொருள்களை வாங்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும், அணிந்திருக்கும் தங்க நகைகளைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கு நகைகள் அணிவிப்பதைத் தவிா்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.