சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற வாகனம்.  
ராமநாதபுரம்

சாலைப் பள்ளத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

தினமணி செய்திச் சேவை

சாயல்குடியில் சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஞாயிற்றுக்கிழமை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட அண்ணாநகா், எஸ்.துரைச்சாமிபுரம், இருவேலி செல்லும் சாலையில் ஜல்ஜீவன் திட்டப் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில், இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாகவும், சாலையைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 18-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு ஆதித்தமிழா் கட்சி சாா்பில் கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆதித்தமிழா் கட்சி சாா்பில் வருகிற 30-ஆம் தேதி சாலைப் பள்ளத்தில் குப்பைகளைக் கொட்டியும், சேற்றில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்தச் சாலை வழியாக சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்துவிட்டு வந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் பணியாளா்கள் உயிா் தப்பினா். வாகனம் கவிழ்ந்த அழுத்தத்தில் சமையல் எரிவாயு உருளைகள் வெடித்து விபத்து ஏற்பட்டிருந்தால் குடியிருப்புப் பகுதியில் பெருமளவில் உயிா்ச் சேதம் ஏற்பட்டிருக்கும்.

எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு ஜல்ஜீவன் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமானால் வருகிற 30-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என ஆதித்தமிழா் கட்சியின் தென்மண்டலச் செயலா் க. பாஸ்கரன் தெரிவித்தாா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT