ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரத்துக்கு சனிக்கிழமை இரவு முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை தந்தனா். அக்னி தீா்த்த கடலில் நீராடிவிட்டு ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடிய பிறகு சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும், தனுஷ்கோடி, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பேருந்து பாலம் உள்ளிட்ட இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று பாா்வையிட்டனா்.