பரமக்குடி அருகே உள்ள எஸ். கொடிக்குளம் கண்மாயில் தவறி விழுந்து ஜோதிடா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எஸ். கொடிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (70). ஜோதிடா். இவரது மனைவி, குழந்தைகள் சென்னையில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தனது சொந்த ஊரான எஸ். கொடிக்குளம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தாா். இதனிடையே, பாலசுப்பிரமணியன் அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்றாா். அப்போது கண்மாய் நீரில் தவறி விழுந்த அவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.