சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தம்பிபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூலாங்குண்டு காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மங்கள் இசை, அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மற்றும் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு காலாகர்சனம், கடம் புறப்பாடு, யாகசாலை பிரவேசம், பின்னர் வேதபாராயணம் தொடர்ந்து 9 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.
தொடர்ந்து புதன்கிழமை காலை 7 மணிக்கு 2-ஆம் கால யாகபூஜையும், 8 மணிக்கு கோ பூஜை, லெட்சுமி பூஜையும், வேதபாராயணமும் மூலமந்திர ஹோமம் நடைபெற்று 9 மணியளவில் மஹா பூர்ணாஹூதி தீபாராதனையும் நடைபெற்றது.
காலை 9.30 மணியளவில் கடம் புறப்பாடு ஆலய வலம் வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கன்னங்குடி ஆதினமிளகி ஐயனார் கோயில் சிவஆகமரத்னா, பாலசேவுக மூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க 9.55 மணியளவில் மஹா கும்பாபிஷேகமும், மஹா அபிஷேகம், திருப்பட்டு சாத்துதல், தீபாராதனை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தம்பிட்டியைச் சேர்ந்த சுப்பையா சேர்வை, கோட்டையம்மாள், சேவுகப் பெருமாள் சேர்வை, சிவகாமி அம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.