சிவகங்கை

திருப்பத்தூர் ஸ்ரீ முருகன் கோயில் வைகாசி விசாக பால்குட விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு புதன்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு புதன்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோயில் அருகே உள்ள முருகன் கோயிலில் முதலாமாண்டு பால்குட விழா புதன்கிழமை நடைபெற்றது விழாவையொட்டி, காலை 8 மணியளவில் ஆதி திருத்தளிநாதர் ஆலயத்தில் பால்குடங்கள் கட்டப்பட்டு மேள தாளங்கள் முழங்க சீதளிவடகரை, திருத்தளிநாதர் ஆலயம், தபால் அலுவலக சாலை, காந்திசிலை, பெரியகடை வீதி, செட்டிய தெரு, காளியம்மன் கோயில் தெரு வழியாக பால்குடங்கள் ஊர்வலமாக முருகன் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பாலபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது.  விழா ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT