சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்திரம்பட்டி கிராமத்தில் வட்டார தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாய பயனாளிகளுக்கு சனிக்கிழமை முன் தேர்வு முகாம் நடைபெற உள்ளது.
ஆத்திரம்பட்டி கிராம மந்தை கூடத்தில் 10.6.17 சனிக்கிழமை காலை 10 மணியளவில் வட்டார தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயப் பயனாளிகளுக்கு தோட்டக்கலை துறை முன் தேர்வு முகாம் நடைபெற உள்ளது.
இதில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குத் தேவையான வீரிய ஒட்டுக் காய்கறிகள் கத்திரி, மிளகாய், தக்காளி நாற்றுகள் மற்றும் மா அடர் நடவுத்திட்ட நிலப்போர்வை, பறவை தடுப்பு வலை, தேனீ வளர்ப்பு, கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் பழைய தோட்டம் புதுப்பித்தல் பசுமை குடில் அமைத்தல் முதலிய திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாடித் தோட்டம் அமைக்க 40 சதவீத மானியத்தில் சிறுதழைகள் வழங்கப்பட உள்ளது. தேசிய நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் மழைத்தூவான் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து பயனடையுமாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் அழகுமலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.