சிவகங்கை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கு அழகப்பா பல்கலை.யில் இலவசப் பயிற்சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை

DIN

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய எழுத்துத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன என்று பதிவாளர் வி. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சி.ஏ.ஜி., மத்திய செயலகப் பணிகள், ரயில்வே அமைச்சகம், வெளியுறவுத்துறை, சுங்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வு நடத்தி வருகிறது. இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வரும் சனிக்கிழமை (ஜூன்10) காலை 10 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வப் பயிலும் வட்டத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.
இப்பயிற்சியில் பங்கேற்கவிரும்புவோர் அழகப்பா பல்கலைக்கழக பழனியப்பச் செட்டியார்நினைவரங்கத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்துக்கு நேரில் சென்று பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 04565 - 223266 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 8870781897 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். .​a‌l​a‌g​a‌p‌p​a‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y‌s‌t‌u‌d‌y​c‌i‌r​c‌l‌e​@‌g‌m​a‌i‌l.c‌o‌m​ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்ய லாம்.
தேர்வுகளுக்கான வயது வரம்பு விண்ணப்பிக்கும் பதவி யைப் பொருத்து மாறுபடுகிறது. பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி கல்வித் தகுதியாகும். சில பதவிகளுக்கு சிறப்புத் தகுதிகள் தேவைப்படும். முதுகலை பட்டப்படிப்பு பயில்வோரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்காக ஆன்லைன் முறையில் 2017 ஜூன் 16-ஆம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT