காரைக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
காலையில் வெயில் கொளுத்தியது. பிற்பகலில் மேகம் திரண்டு மாலை 6 மணியளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.
தொடர்ந்து இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை பெய்யத் தொடங்கியதும் மின்தடை ஏற்பட்டது.
பின்னர் இரவு 8.15 மணியளவில் மீண்டும் மின்சாரம் சீரானது.
மின்தடை, கன மழையால் போக்குவரத்தில் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். மழை பெய்ததால் நகரில் குளிர்ச்சி நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.