சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாங்குடியில் கொந்தலையம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வயல் காக்கும் தெய்வமாகக் கருதப்படும் இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை அம்பாளுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீர், இளநீர் மற்றும் புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கொந்தலையம்மனுக்கு பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபம் காட்டப்பட்டது. மாலை 4 மணிக்கு நடைபெற்ற பொங்கல் விழாவில், கிராமப் பெண்கள் மந்தையில் ஒன்றுகூடி ஒலைக் கூடையில் பொங்கல் தயாரிக்கும் பொருள்களை வைத்து, வயல் பகுதிகளில் நடந்து சென்று அம்மனுக்கு பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8 மணியளவில் அம்மனுக்கு பூத்தட்டு எடுத்து பூச்தொரிதல் விழாவும் நடைபெற்றது. பின்னர் இரவு வாணவேடிக்கையும், கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்றுப்புறக் கிராமத்தினரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.