சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஓவலிப்பட்டியில் புதன்கிழமை வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
ஒவிலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புலிமேட்டு காளியம்மன் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் வைகாசிப் பத்து அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இவ்வழக்கப்படி புதன்கிழமை ஊர்ப் பெரியவர்கள் பொதுச் சாவடியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஓவலிப்பட்டி கண்மாய் வந்தடைந்து, தொழுவில் உள்ள மாடுகளுக்கு மரியாதை செலுத்தினர்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட இம்மஞ்சுவிரட்டில் சில காளைகள் பிடிபட்டும் சில காளைகள் பிடிபடாமலும் சென்றன. சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர். நெற்குப்பை, புரந்தன்பட்டி, மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி, காரையூர், மங்குடி, திருப்பத்தூர், கீழச்சிவல்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சு விரட்டு முடிவில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக 10 பேர் மீது நெற்குப்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.