சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் செப். 8-இல் (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.லதா புதன்கிழமை வெளியிட்ட செய்தி விவரம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.இதில் அந்தந்த வருவாய் கோட்டத்துக்குட்பட்ட கிராம மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா,வருமானச் சான்றிதழ், பிறப்பு,இறப்புச் சான்றிதழ்,சமூக நலத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை ஆகியவற்றுக்கு விண்ணப்பிகலாம்.அவை விசாரனை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும்.
முகாம் நடைபெறும் இடங்கள்:சிவகங்கை வட்டம் அரசனூர், காரைக்குடி வட்டம் மணச்சை, திருப்புவனம் வட்டம் டி.கரிசல்குளம், தேவகோட்டை வட்டம் அரையணி, மானாமதுரை வட்டம் சங்கமங்கலம், திருப்பத்தூர் வட்டம் ஒழுகமங்கலம், இளையான்குடி வட்டம் பெத்தான் வலசை, காளையார்கோவில் வட்டம் மரக்காத்தூர், சிங்கம்புணரி வட்டம் ஒடுவன்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.