சிவகங்கை

திருப்புவனம் பகுதியில் ஆகஸ்ட் 29 மின் தடை

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் வியாழக்கிழமை (ஆக.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முருகையன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருப்புவனம், தி.புதூர், லாடனேந்தல், தூதை,திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூர், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூர், வன்னிகோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனார்பேட்டை, கலியாந்தூர், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூர், கீழடி, கழுகேர்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கானாடுகாத்தான் பகுதியில் ஆக. 30 இல் மின்தடை
காரைக்குடி அருகே கானாடுகாத்தான்  துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 30) மின்தடை அறிவிக்கப்பட்டுள் ளது.
  அதன்படி ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவாங்குடி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

SCROLL FOR NEXT