சிவகங்கை

இளைஞர் கொலை வழக்கு: 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

DIN

சிவகங்கையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில்  7 பேர் மதுரை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
 சிவகங்கை அருகே உள்ள பனங்காடி கிராமத்தைச் சேர்ந்த காளையப்பன் மகன் ராஜசேகரன்(38). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 11 பேர் மீது சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, அதில் 4 பேரை கடந்த 9 ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தேடி வந்தனர். 
 இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கெளரிப்பட்டியைச் சேர்ந்த அருள், வைரவன்பட்டியைச் சேர்ந்த பரமசிவம், அரசனேரி கீழமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்பாபு, பிரவீன், அரவிந்த், சிவகங்கை டி.புதூரைச் சேர்ந்த வசந்த், கொல்லங்குடி அருகே உள்ள கீரனூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் ஆகிய 7 பேரும் மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்துள்ளனர் என சிவகங்கை நகர் போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT