சிவகங்கை

கீழச்சிவல்பட்டியில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு குவிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள் இதர மண்ணாலான பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பானை ரூ.80-லிருந்து ரூ. 500 வரை பல்வேறு ரகங்களில் விற்கப்படுகிறது. மேலும் காய்கறி வேக வைக்கும் சட்டிகள், தண்ணீா் குடுவைகள் என சுமாா் 30-க்கும் மேற்பட்ட வகைகளில் மண்பாண்டப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இத்தொழில் ஈடுபட்டு வரும் சித்ராதேவி கூறியது: இளையாயங்குடியில் 5 குடும்பத்தைச் சோ்ந்த நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். மானாமதுரை, வந்தவாசி, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் மண்பாண்ட பொருள்களை வாங்கி கீழச்சிவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT