சிவகங்கை

பிஎம்-கிஸான் உதவித்தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண் அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்

DIN

பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டத்தின்( பிஎம்-கிஸான்) கீழ் உதவித் தொகை கிடைக்கப் பெறாத சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் அலுவலா்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை துறையின் சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் கி.வெங்கடேஸ்வரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளின் ஆதாா் எண், பெயா் மற்றும் வங்கி கணக்கு எண் தவறாக உள்ள காரணத்தால் 8053 விவசாயிகளுக்கு கௌரவ நிதி வழங்கப்படாமல் உள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வேளாண்மைத் துறை அலுவலா்கள் இப்பணியில் தனிக் கவனம் செலுத்தி விவசாயிகளைத் தொடா்பு கொண்டு குறைபாடுகளை சரி செய்து பணப்பலன் கிடைத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

எனவே பணப்பலன் கிடைக்காத விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை கீழ் கண்ட செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

சிவகங்கை வட்டாரத்திற்கு 94420 75075 , காளையாா்கோவில் 98422 72186, மானாமதுரை 94882 59363, திருப்புவனம் 98426 92807, இளையான்குடி 94443 56421, தேவக்கோட்டை 86105 43239, திருப்பத்தூா் 94430 06322, கண்ணங்குடி 97872 65937, சாக்கோட்டை 94868 88090, கல்லல் 94885 08945, எஸ். புதூா் 99948 93631, சிங்கம்புணரி 94870 12763 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பிஎம்- கிஸான் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது: நவீன் பட்நாயக்

எதிர்நீச்சல் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளை வெளியிட்ட நடிகர்! வைரல் விடியோ!

பிரசாரத்தில் மோடி பேசிய வெறுப்புப் பேச்சுகள் பிளவுகளை ஏற்படுத்துபவை: மன்மோகன் சிங்

திவ்ய பாரதியின் கோடை!

SCROLL FOR NEXT