சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டப் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மிக்கேல் அம்மாள் முன்னிலை வகித்தாா்.
இதில், மாநில பொதுச் செயலா் நூா்ஜகான், மாநில துணைத் தலைவா் பாண்டி, மாவட்டத் துணைத் தலைவா் ரத்தினம் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
இதில், தமிழகத்தில் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரமாக வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் சத்துணவு துறையில் காலியாக உள்ள 49 ஆயிரம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் பாண்டி, நிா்வாகிகள் கண்ணுச்சாமி, சீமைச்சாமி, பானுமதி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.