சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தாா். செயலா் குணாளன் முன்னிலை வகித்தாா். இவ்விழாவில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. பின்னா் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டன. இவ்விழாவில் ஆசிரியா்கள் தமிழ்ச்செல்வி, ஜெயலெட்சுமி மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா். முன்னதாக ஆசிரியா் கலைவாணி வரவேற்றாா். பள்ளி முதல்வா் பழனியப்பன் நன்றி கூறினாா்.
இதேபோல, பாபா அமீா்பாதுஷா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளா் பாபாஅமீா்பாதுஷா தலைமை வகித்தாா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கபட்டன.
திருப்பத்தூா் ஆண்கள் அரசு மேல்நிலைபள்ளியில், மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் முருகேசன் பரிசுகள் வழங்கினாா்.