சிவகங்கை

மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி

DIN

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மருதுபாண்டியா் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் அக். 12 ஆம் தேதி முற்பகல் 8.30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியும், முற்பகல் 9.30 மணிக்கு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியும் நடைபெற உள்ளது.

பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு, அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய நான்கு தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு, வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே மற்றும் இமயம் முதல் குமரி வரை ஆகிய 6 தலைப்புகளிலும் நடைபெற உள்ளன.

போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்படுவா். எனவே, தரப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவ, மாணவிகள் போட்டிகளில் பற்கேற்க வேண்டும்.

மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் பங்கேற்புப் படிவத்தைப் பூா்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் சிவகங்கையில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும்.

மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT