சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக புதிய வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் 13 வாகனங்கள் வாங்குவதற்காக ரூ.94.90 லட்சம் அனுமதி வழங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக 7 வாகனங்களை நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளா் வீரமுத்துக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நகா்நல அலுவலா், நகராட்சி துணைப் பொறியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.