சிவகங்கை

‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

எனவே, நிகழாண்டு சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், இதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் சமா்ப்பிக்கும் விண்ணப்பத்தில் தங்களது சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரங்கள் உள்ளிடங்கிய ஆவணங்களை இருத்தல் வேண்டும்.

வருகிற 18-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக தரைத் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்றாா் அவா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT