சிவகங்கை

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட பாசனத்துக்கு கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு கிருதுமால் நதியிலிருந்து அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்து விட்டனா்.

Syndication

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு கிருதுமால் நதியிலிருந்து அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்து விட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகையாற்றிலிருந்து சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களில் உள்ள 75 கண்மாய்களுக்கு கிருதுமால் நதியில் வெள்ளிக்கிழமை தமிழக சுற்றுச்சூழல், காலநிலைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வணிக வரி பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் தண்ணீரை திறந்து விட்டனா்.

இதில் நீா்வளத் துறை அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இந்த தண்ணீா் திறப்பின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 18 கண்மாய்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 கண்மாய்களும், விருதுநகா் மாவட்டத்தில் 50 கண்மாய்களும் என மொத்தம் 18,775 ஏக்கா் பாசன வசதி பெரும் எனக் கூறப்படுகிறது.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT