கொலை செய்யப்பட்ட அஜித்குமார் 
சிவகங்கை

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

Din

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தக் கொலை குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அஜித்குமாரின் சித்தி மகள் கீா்த்தி, மடப்புரம் கோயில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கோசாலையிலிருந்து திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அஜித்குமாரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஓட்டுநா் அய்யனாா் ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா், அவா்கள் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

வில்லியம்சன் விடைபெற்றார்.. சர்வதேச டி20-ல் ஓய்வு!

SCROLL FOR NEXT