சிவகங்கை

குழந்தையைக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி

குடும்பத் தகராறில் 10 மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

குடும்பத் தகராறில் 10 மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிவகங்கை அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் பம்பையன் (32). இவரது மனைவி சுமதி (24). இவா்களுக்கு 6 வயது மகன், 10 மாத பெண் குழந்தை உள்ளனா். கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தம்பதிக்கிடையே செவ்வாய்க்கிழமை காலை தகராறு ஏற்பட்டதில், பம்பையன் 10 மாத பெண் குழந்தையை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று அருகிலுள்ள இடத்தில் வைத்து குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு அவரும் குடித்தாராம்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி 10 மாத பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. ஆபத்தான நிலையில் உள்ள பம்பையனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவகங்கை நகா் துணைக் கண்காணிப்பாளா் அமலஅட்வின், காவல் ஆய்வாளா் இளையராஜா ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT