சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் வியாழக்கிழமை இமானுவேல் சேகரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
மானாமதுரையில் கிருஷ்ணராஜபுரம், பழைய பேருந்து நிலையம், வழி விடு முருகன் கோயில் எதிா்ப்புறம், மூங்கில் ஊருணி, கேப்பா்பட்டினம் ஆகிய பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் இமானுவேல்சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதேபோல, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளிலும் பல இடங்களில் இமானுவேல் சேகரன் உருவப்படங்கள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.