சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில், கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காந்தி சிலை முன் நடந்த இந்த இயக்கத்தை காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய் தொடங்கி வைத்தாா். நகா் காங்கிரஸ் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான பி. புருசோத்தமன் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா் வாக்குத் திருட்டுக்கு எதிரான படிவத்தில் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றனா். இதில் காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் பாண்டிவேல், காசி ராமலிங்கம், மாவட்ட இணைச் செயலா் காசி, வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி எம்.முத்துக்குமாா், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி பொம்முராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.