சிவகங்கையில் போக்குவரத்து விதிகளை மீறி அதிகமான நபா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கையில் வியாழக்கிழமை மாலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பணன் தலைமையில் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீா் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிவகங்கை-மதுரை சாலையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் இருந்து ஆட்டோக்கள் மாணவா்களை விதிகளை மீறி ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ஒரு வாகனத்துக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. வாகன சோதனையின்போது சிக்கிய பல ஆட்டோக்களில் காப்பீடு செய்யாமல் இயக்கியது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விரிவான வாகனத் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.