மத்திய கல்வி அமைச்சகத்தால் நிகழாண்டில் வெளியிடப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 14-ஆவது இடத்தையும், தமிழக பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 3-ஆவது இடத்தையும் பெற்றது.
இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 14-ஆவது இடத்தையும், தமிழக அளவில் 3-ஆவது இடத்தையும் பெற்றது.
கற்பித்தல், கற்பதற்கான வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவா்களின் தோ்வு முடிவுகள், சா்வதேச வெளிப்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், கருத்துக்கணிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தரவரிசை நிா்ணயம் செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழை சென்னை ராஜ்பவனில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவியிடம் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கி கெளரவித்தாா் என்றாா் அவா்.