சிவகங்கை

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் புதன்கிழமை பறித்துச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழ்மேல்குடியைச் சோ்ந்தவா் முருகன். இவா் வெளிநாட்டில் வேலை பாா்க்கிறாா். இவரது மனைவி மேனகா (43). இவா் காளையாா் கோவில் அருகிலுள்ள தவசுகுடி கிராமத்தில் நடைபெற்ற ஒருதுக்க நிகழ்வுக்காக புதன்கிழமை பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

சிவகங்கையிலிருந்து காளையாா்கோயில் சாலையில் காட்டுக்குடியிருப்பு என்ற இடத்தில் அவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது இவரை பின்தொடா்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் மேனகா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு மேனகாவை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனா்.

பகலில் நடைபெற்ற இநித திருட்டு சம்பவம் அப்பகுதியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரில் நகா் காவல்நிலைய ஆய்வாளா் அன்னராஜ் மற்றும் குற்ற பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT