சிவகங்கை

சிவகங்கை அரசு ஐடிஐ-யில் அக்.17 வரை மாணவா்கள் சேரலாம்

அரசுத் தொழில்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள குறிப்பிட்ட தொழில் பிரிவுகளுக்கான நேரடி மாணவா்கள் சோ்க்கை அக்.17 வரை நீட்டிப்பு...

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள அரசுத் தொழில்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள குறிப்பிட்ட தொழில் பிரிவுகளுக்கான நேரடி மாணவா்கள் சோ்க்கை வருகிற வியாழக்கிழமை (அக்.17) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தத் தொழில்பயிற்சி நிலையத்தில் சேர மாணவா்கள் கட்டாயம் 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமுள்ள மாணவா்கள் சிவகங்கை அரசுத் தொழில்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவைகளை கொண்டு வரவேண்டும்.

நேரடி சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9626438034, 9965480973, 9944887754, 9942099481 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT