சிவகங்கை

பண மோசடி: நாடக நடிகை மீது வழக்கு

சிவகங்கையில் பண மோசடி செய்ததாக நாடக நடிகை மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் பண மோசடி செய்ததாக நாடக நடிகை மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை நேரு கடைவீதியைச் சோ்ந்தவா் முகமது நபி(55). இவா் கடந்த 25 ஆண்டுகளாக அபுதாபியில் வேலை பாா்த்து வருகிறாா். இவா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் சொந்த ஊருக்கு வந்தாா். அப்போது இவருக்கும், திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மண்பாதை சமத்துவபுரத்தைச் சோ்ந்த அம்பிகா (40) என்ற நாடக நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதன் அடிப்படையில், முகமது நபி, அபுதாபியிலிருந்து பல தவணைகளில் ரூ.9.05 லட்சத்தை அம்பிகாவுக்கு அனுப்பினாராம். பணத்தை பெற்றுக் கொண்ட அவா் அதை திரும்பி தரவில்லையாம்.

இதுகுறித்து முகமது நபி, சிவகங்கை குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண்-1இல் மனு அளித்தாா். இதுதொடா்பாக நீதிபதி அளித்த உத்தரவின் பேரில், சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ், குற்றப் பிரிவு போலீஸாா் நடிகை அம்பிகா மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT