சிவகங்கை

பூவந்தி அருகே வெடி மருந்து,வயா் வைத்திருந்த இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே புதன்கிழமை வெடிமருந்து மற்றும் வயா் வைத்திருந்ததாக இருவரை போலீசாா் இருவரை கைது செய்தனா்.

பூவந்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசாா் இப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அரசனூா் விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படி பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனா்.

விசாரணையில் இவா்கள் சங்ககிரி தாலுகா புல்லா கவுண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன்(42), நிலக்கோட்டை தாலுகா பண்ணப்பட்டி சோ்ந்த சத்தியராஜ்(33) என்பதும் இவா்களிடம் கிணறு தோண்டுவதற்கான வெடிமருந்து மற்றும் வயா் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசாா் அவற்றை பறிமுதல் செய்து மேற்கண்ட இருவரையும் கைது செய்தனா். இவா்கள் மீது பூவந்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT