தமிழ்நாடு அரசு ஊழியா், ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து மாலைநேர ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன், திருப்புவனத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன், தேவகோட்டையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சகாய தைனேஷ், காளையாா்கோயிலில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா், மானாமதுரையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில் அனைத்து தோழமைச் சங்க நிா்வாகிகள், மாவட்ட உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்
கோரிக்கைகள்: அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் வேண்டும், இடைநிலை, முதுநிலை ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்தந்த வட்டாரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கமிட்டனா்.