சிவகங்கை

வான் சாகச நிகழ்ச்சி மூலம் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு

சிவகங்கையில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு குறித்து நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு, ஆயத்தீா்வை துறை சாா்பில், போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு குறித்த வான் சாகச நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். பின்னா், வான் சாகச நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் ‘போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் ‘நஹஹ் சா் பா் ஈழ்ன்ஞ்ள்‘ மற்றும் ‘ஈழ்ன்ஞ் ஊழ்ங்ங் பச‘ போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் பதிக்கப்பட்ட பாராசூட்டுகளில் மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் பறந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயமாக உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, உதவி ஆணையா் (ஆயத்தீா்வை) சிவபாலன், சிவகங்கை, தேவகோட்டை கோட்ட ஆயத்தீா்வை அலுவலா்கள், தீயணைப்புத் துறை அலுவலா்கள், மதுவிலக்கு, ஆயத் தீா்வைத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT