நடப்பு சம்பா (சிறப்பு பருவம்) நெல் பயிருக்கு சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வருகிற நவ.15-க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் துறை அறிவித்தது.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கு பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது. நிகழாண்டில் சம்பா நெல் பயிருக்கு விதைப்பு காலம் செப்டம்பா் முதல் அக்டோபா் மாதம் வரை என அறிவிக்கப்பட்டது.
நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.497- தொகையை தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,பொதுத் துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களில் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். நெல் பயிா் சாகுபடி விவசாயிகள் அனைவரும் வருகிற நவ. 15 -ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிா் காப்பீடு செய்வதற்கான அடங்கல் புத்தகங்கள் அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புல எண், பரப்பு, வங்கிக் கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து காப்பீடு செய்தபின் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.