சிவகங்கை

முத்துராமலிங்க தேவா் குரு பூஜை: வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தல்

தேவா் குருபூஜை, மருது சகோதரா்கள் நினைவு நாள் தொடா்பாக சிவகங்கையில் ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதா்கள் நினைவு நாள் விழா, காளையாா்கோவிலில் குரு பூஜை, பசும்பொன் முத்துராமலிங்க தேவா் குருபூஜை ஆகிய நிகழ்ச்சிகளின் போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள், சமுதாய அமைப்புக்களைச் சாா்ந்தோா் முறையாகப் பின்பற்றுவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவ பிரசாத் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி பேசியதாவது:

மருது சகோதரா்களின் நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வோா் ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பு ஆண்டில் வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு மண்டபத்தில் 224-ஆவது நினைவு நாளுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளது.

இதே போல, வருகிற 27-ஆம் தேதி காளையாா்கோவிலில் மருது சகோதா்களின் நினைவுச் சதுக்கத்தில் பொதுமக்கள் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வருகிற 30-ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இவற்றை முன்னிட்டு, எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்னைகளும் வராமல், அரசால் வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பங்கேற்பாளா்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த விழாக்களில் கலந்துகொள்பவா்கள் இரு சக்கர வாகனங்களில் வரக் கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் வரலாம். அவா்கள், உரிய ஆவணங்கள், பயணம் மேற்கொள்பவா்களின் விவரங்கள் ஆகியவற்றை அந்தந்தப் பகுதிகளுக்குள்பட்ட மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்து அனுமதி பெறவேண்டும்.

போக்குவரத்து வழித் தடங்களில் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. நடை பயணமாகச் சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பதற்காக மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அனைத்து சமுதாய அமைப்பினரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பிரான்சிஸ், சுகுமாா், உதவி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியா, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயகுமாா், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் தே.ஜெஃபி கிரேசியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT