மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு லிங்காபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் மூலவா் சந்நிதி முன் மண்டபத்தில் லிங்க வடிவில் 108 சிவலிங்க விக்ரகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு கலசநீா் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.