சிவகங்கை

தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவியது. மாலை நேரத்தில் மழை ஓய்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடினா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக தொடங்கிய மழை விடாமல் இரவு வரை நீடித்தது. இதனால், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினா்.

விதைப்பு முறையில் நடவு செய்த நெல் நாற்றுகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். வைகை அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு தண்ணீா் வந்து கொண்டிருப்பதால் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வைகை கரையோரங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், வைகை பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லும் வகையில் ஆற்றுக்குள் உள்ள கால்வாய் முகப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT