சிவகங்கை

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

சிவகங்கை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: சிவகங்கை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (70). இவா் சிவகங்கை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா், தனது இரு சக்கர வாகனத்தில் தீபாவளி அன்று இரவு சிவகங்கை தென்றல் நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

தென்றல் நகா் பகுதியில் வரும் போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் கிருஷ்ணனின் இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் காயமடைந்த கிருஷ்ணன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT