காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தொடா் மழையால் புதன்கிழமை மரம் வேரோடு சாய்ந்து இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.
கடந்த சில நாள்களாக காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக காரைக்குடி நூறடிச்சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது. இதில் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனம் சேதமடைந்தது.
இதைத்தொடா்ந்து, காரைக்குடி மாநகராட்சி ஆணையா் சங்கரன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். பின்னா், மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த மரத்தை அகற்றினா். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழையின் காரணமாக மழைநீா் ஆங்காங்கே சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.