சிவகங்கை

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சிவப்பிரகாசம் (22). இவா் தனது தாய் மாலாவை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருப்புவனத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.

மதுரை- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் டி. பாப்பான்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சிவப்பிரகாசம் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT