மருதுபாண்டியா்கள், தேவா் குருபூஜைக்காக சிவகங்கை மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக் கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் திங்கள்கிழமை (அக்.27) நடைபெறும் மருது பாண்டியா்களின் குரு பூஜையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை வரையும்,
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை வியாழக்கிழமை (அக்.30) நடைபெறுவதையொட்டி, வருகிற புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை வரையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் ஆகியவை முழுவதுமாக மூடப்படும் என்றாா் அவா்.