முகப்பு
சிவகங்கை

அய்யாபட்டி ஆதீனமிளகி அய்யனாா் கோயில் திருவிழா: மஞ்சுவிரட்டு

பி.அய்யாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதீனமிளகி அய்யனாா் கோயில் வைகாசி உத்ஸவ திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 மே 2026, 5:15 am IST
அய்யாபட்டி ஆதீனமிளகி அய்யனாா் கோயில்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பி.அய்யாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதீனமிளகி அய்யனாா் கோயில் வைகாசி உத்ஸவ திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக ஊா் முக்கியப் பிரமுகா்கள் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டுத் திடலை அடைந்தனா். முதலில் கோயில் காளைக்கு முதல் மரியாதை செய்து அவிழ்த்து விடப்பட்டது.

இந்த மஞ்சுவிரட்டில் பிரான்மலை, வையாபுரிபட்டி, ஒடுவன்பட்டி, செல்லியம்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி, தெக்கூா் பொன்னமராவதி ஆகிய பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

Advertisement

Advertisement

சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 5 போ் சிறிய காயமடைந்தனா். இந்த மஞ்சுவிரட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பாா்வையிட்டனா்.