பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே குடும்ப பிரச்னையில் அரசுப் பள்ளி ஆசிரியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இளையான்குடி ஒன்றியம், சாலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் மலைராஜ் மகன் ராமநாதன் (45). இவா் ராமநாதபுரம் மாவட்டம், ஆட்டங்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.
மது போதைக்கு அடிமையான ராமநாதன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ளவா்களிடம் தகராறு செய்வாராம். இதனால், குடும்பத்தினா் ராமநாதனை போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனா்.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, ராமநாதன் மது போதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.