தேனி

சக்திசேனா நிர்வாகிகளுக்கு கம்பம் செல்ல தடை

தேனியில் இருந்து கம்பத்திற்குச் செல்ல முயன்ற கோவை சக்திசேனா அமைப்பின் நிர்வாகிகளை புதன்கிழமை போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

DIN

தேனியில் இருந்து கம்பத்திற்குச் செல்ல முயன்ற கோவை சக்திசேனா அமைப்பின் நிர்வாகிகளை புதன்கிழமை போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
கம்பத்தில் சில நாள்களுக்கு முன் இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில், பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட தரப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கோவை சக்திசேனா அமைப்பினர் தலைவர் அன்புமாரி, பொதுச் செயலர் ஜெகதீசனார், மாநில அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் தேனியில் இருந்து கம்பம் செல்ல முயன்றனர். அவர்களை தேனியில் போலீஸார் தடுத்து நிறுத்தி, கம்பத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை நிலவுவதாக தெரிவித்து கோவைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
 பின்னர் கம்பத்தில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாளிடம் மனு அளித்து விட்டு சக்திசேனா நிர்வாகிகள் கோவைக்குத் திரும்பச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT