போதைப் பொருள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனையை பலப்படுத்த புதன்கிழமை நடைபெற்ற இரு மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக- கேரள காவல்துறை மற்றும் சுங்கத்துறையினர் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது. கூட்டத்தில், தேனி மாவட்ட மதுவிலக்கு கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்மாவதி, இடுக்கி மாவட்ட சுங்கத்துறை உதவி ஆணையர் ஜேக்கப் ஜான் மற்றும் இரு மாநில மதுவிலக்கு, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர். அப்போது, இடுக்கி மற்றும் தேனி மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளையும் பலப்படுத்துவது என்றும், 3 மாதங்களுக்கு ஒரு முறை தேனி மாவட்ட போலீஸார், இடுக்கி சுங்கத்துறை மற்றும் போலீஸார் இணைந்து சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தேனி கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்மாவதி கூறியதாவது: தேனி மாவட்ட வனச்சாலை வழியாக கேரளாவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுக்க வனப்பகுதிகளில் நிரந்தர சோதனைச் சாவடிகள் அமைக்க வனத்துறை உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.