தேனி

கம்பம் அருகே அரசுப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்

கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கூடுதலாக 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

DIN

கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கூடுதலாக 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கணிதம், வேதியியல் ஆகிய பாடத்திற்கு மட்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். இந்த இரு ஆசிரியர்களும் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். இதனால், தற்போது இந்தப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிப்பதாக கருநாக்கமுத்தன்பட்டியில் செவ்வாய்க்கிழமை பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இந்நிலையில், கலந்தாய்வில் பணியிட மாறுதல் பெற்ற கருநாக்கமுத்தன்பட்டி பள்ளி ஆசிரியர்கள் இருவரின் பணியிட மாறுதல் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து, தொடர்ந்து அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்றும், இப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பணி நிரவல் முறையில் புதிதாக 5 ஆசிரியர்களை நியமித்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT