தேனி

தனியார் எஸ்டேட்டில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள் பறிமுதல்

மேகமலை வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

மேகமலை வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேகமலை வனச்சரகத்துக்குள்பட்ட பொம்முராஜபுரம் பகுதியில் ஆர்.பசுபதி என்பவருக்கு சொந்தமாக 155 ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட் உள்ளது. இதில் தேக்கு, சில்வார் ஒக் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த எஸ்டேட்டில் பாதை அமைப்பதற்காக வனத்துறையினரின் அனுமதியின்றி 167 வகையான மரங்களை கடந்த 3 மாதங்களுக்கு முன் வெட்டியுள்ளனர்.
இதனையறிந்த மேகமலை வனக்காப்பாளர் ஆனந்தகுமார் அங்கு சென்று வெட்டிய மரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல வன அலுவலருக்கு, அவர் தகவல் அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT