தேனி

தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு 6,758 யூனிட் ரத்தம் தானம்: ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு 66 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 6,758 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.

DIN

தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு 66 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 6,758 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
 தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவ, மாணவியரின் தன்னார்வ ரத்த தான விழிப்புணர்வு பேரணி மற்றும் ரத்ததான முகாமை தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:
தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு 66 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 6,758 யூனிட் ரத்தம் ரத்தக் கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ரத்ததானம் செய்வதால், மற்றொருவர் நம்மால் காப்பாற்றப்படுகிறார் என்ற மனதிருப்தி ரத்த தானம் செய்பவர்களுக்கு ஏற்படுகிறது. ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, ரத்தக் கொடையாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
 முகாமில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) (பொ) சக்திவேல், நுண்ணுயிரியல் பிரிவு துறைத்தலைவர் மைத்ரேயி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின், திட்ட மேலாளர் முகமது பாரூக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT